கலவானை பிரதேச சபை உங்களை அன்போடு வரவேற்கிறது
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைத்தலைத் தொடர்ந்து, கலவானை பிரதேச சபையின் அலுவலகக் கட்டிடம்.
ஸ்ரீ சுமன தெய்வத்தின் ஆசீர்வாதத்தில் சபரகமுவ மாகாண இரத்தினபுரி மாவட்டத்தில் குகுழு கோரளையில் மத்திய மற்றும் மேற் பிரிவில் சிங்கராஜ உலக பாரம்பரிய எல்லைப் பகுதியில் கலவானை பிரதேச சபை 263,84 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.இதற்குற்பட்ட பகுதியில் வெவ்வேறு இன குழுக்களைக் கொண்ட 53151 மக்கள் தொகையினர் பரவலாக வாழ்கின்றதோடு 33 கிராம சேவகர் பிரிவுகள் அடங்கிய முழு களத்தில் சிதறியுள்ளது.தேயிலை தொழில் மற்றும் இரத்தினக்கல் அகழ்தல் பிரதான தொழில்களாக இருப்பதோடு இப்பிரதேசத்தில் பல அரசு நிறுவனங்கள், அரசு பள்ளிகள் பல உள்ளன.இதன்படி பிரதான நகரத்தை கேந்திர நிலையமாகக் கொண்டு அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முக்கிய நகரமாக உள்ளது.
கௌரவ தலைவரின் செய்தி
குருளு கோறலையின் மேற்பிரிவு மத்திய பிரிவு எனும் பிரிவுகளால் உள்ளடக்கப்படும் கலவான பிரதேச சபையிலும்,நிர்வாக பிரதேசத்திலும் வாழ்கின்ற மக்களது பொருளாதாரம்,சமூக, கலாசார, கல்வி, துறைகளின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் பல்வேறு நிதி உதவியின் கீழ் வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களையும் முறையாக முகாமைத்துவப்படுத்துவதின் ஊடாக சமுர்த்திமயமான கிராம அரசொன்றை உருவாக்குவதற்கான சகல அபிவிருத்தி செயற்பாடுகளையும் கேந்திரப் படுத்தி கொண்டு மக்களது நலன் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுவதும், துரிதமான வளர்ச்சியடைந்து வரும் உலகத்துடன் சங்கமிப்பதற்கு தகவல் தொழில்நுற்பத்தையும், தொடர்பாடலையும் எமது சபை பயன் படுத்தி கொள்வதோடு முறையாக சேவை வழங்கும் நிறுவனமொன்றாக உருவாகி மக்களுக்கு விரைவான சேவையை வழங்குவதே எனது குறிக்கோளாகும். சகல மக்களுக்கும் நல்லெதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்..
செயளாலரின் செய்தி
கலவான பிரதேசமும் அதற்குட்பட்ட நிர்வாக பகுதிகளும், உள்ளூராட்சி மன்றம் என்ற வகையில் முறையான செயற் காரியங்களின் ஊடாக பயன் மிகுந்த சேவைகளை வழங்குவதே பிரதான நோக்கமாக இருப்பதோடு அதற்கான உபயோகத்திற்கு உட்படுத்த கூடிய வசதி என்ற வகையில் நவீன தொழில்நுற்பத்துடன் கூடிய தகவல் நிலையமொன்றாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காணலாம். இதனூடாக எல்லா மக்களும் பயனடையக்கூடிய வகையில் கவர்ச்சிகரமான சேவையை வழங்கலாம் என்பதை நான் எதிர்ப்பார்க்கின்றேன்.
கலவான பிரதேச சபையின் உத்தியோகப்பூர்வ வலையமைப்பையும் மின்னஞ்சல் நூலகத்தையும் 2012 நவம்பர் 07 திகதி திறந்து வைத்தல்.
தூரநோக்கு
உள்ளூராட்சி நிறுவனம் என்ற வகையில் அதன் எல்லைகுற்பட்ட மக்களின் சுகாதார சேவைகள் பொதுப்பயன்பாடுச் சேவைகளை நிறைவேற்றுவதுடன், பொதுப்பாதைகளை அமைத்தல், அபிவிருத்தி செய்தல், பராமரிப்பதுடன் மக்கள் சௌகரியம், பொதுப்பயன்பாடு, தேவைகளை பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றுவதற்கு தேவையான விடயங்களை ஒழுங்கு படுத்துதல் கலவான பிரதேச சபையின் தூர நோக்காகும்.